தமிழ்நாடு

கட்சியில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க. செல்வம்

DIN

சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமே இல்லை, திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.

தில்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்ததைத் தொடர்ந்து திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வத்தை, திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கு.க. செல்வம் கூறுகையில், தற்போது எந்தக் கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். சட்டப்பேரவையில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்று பிறகு முடிவெடுக்கப்படும்.

என் மீதான குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமே இல்லை, திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை. வரும் தேர்தலில் வேறு கட்சி சார்பில் வாய்ப்பு கொடுத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். 

திமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT