தமிழ்நாடு

கரோனா பொதுமுடக்கம்: கிராமசபைக் கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

14th Aug 2020 02:59 PM

ADVERTISEMENT


கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும், சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் மற்றும் தொற்று அச்சம் காரணமாக, இந்தாண்டு நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து​செய்யப்படுவதாகவும், கிராமசபைக் கூட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT