தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாகன மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகிளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
நீலகிரி மாவட்டத்தில் தேவலா 7 செ.மீ மழையும், சுடலூர் பஜார், பந்தலூர், சேருமுல்லே, ஹாரிசன் எஸ்டேன், பிறையார் எஸ்டேட், நடுவட்டம் தலா 1 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.