தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

11th Aug 2020 04:29 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.11) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு (ஆக. 11 முதல் 13 வரை) வட வானிலையே நிலவும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும்.

மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 120 மி.மீ., சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 100 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 90 மி.மீ., சின்னக்கல்லாரில் 80 மி.மீ., சின்கோனா, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட், கோவை மாவட்டம் சோலையாரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளம், கா்நாடகம், கோவா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.11) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு புதன்கிழமை (ஆக. 12) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT