தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

11th Aug 2020 06:09 PM

ADVERTISEMENT

 

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள அமைப்பு செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய குழுவினர் ஆய்வுகள் நடத்தினர்.

தென்மேற்கு பருவமழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு உச்சநீதிமன்றம் இரண்டு குழுக்களை நியமித்தது. அதன்பேரில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் கொண்ட ஐவர் குழுவான மத்திய துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை, அணை பகுதிக்கு சென்றனர்.

மத்திய நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சரவணகுமார், தலைமையில் தமிழகப் பிரதிநிதிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பினு பேபி, உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் பிரதான அணை, பேபி அணை காலரி மற்றும் சுரங்கப்பகுதிகள், மதகு பகுதிகள் போன்ற இடங்களில் ஆய்வு நடத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT