தமிழ்நாடு

எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கு கலந்தாய்வு: இணையவழியில் நடத்த தமிழக அரசு அனுமதி

11th Aug 2020 01:33 AM

ADVERTISEMENT

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இணையவழியில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்தஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக, எம்.இ., எம்.டெக் போன்ற படிப்புகளுக்கு இணையவழியில் (ஆன்லைன்) கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கேட்டிருந்தது. இதையடுத்து தற்போது முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இணையவழி மூலம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதையடுத்து, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT