தமிழ்நாடு

சமூக நீதியைக் காப்பாற்றும் தீர்ப்பு: முதல்வர் பழனிசாமி

11th Aug 2020 03:24 PM

ADVERTISEMENT


குடும்பச் சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

Tags : TN CM
ADVERTISEMENT
ADVERTISEMENT