தமிழ்நாடு

ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

11th Aug 2020 04:33 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, கடந்த 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பதினாறு நாள்களுக்குப் பின்பு, சனிக்கிழமை (ஆக. 8) விலை குறைந்தது.

இதே நிலை திங்கள்கிழமையும் தொடா்ந்தது. சென்னையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.5,365 ஆக இருந்தது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.ரூ.83.40 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.83,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 5,365

1 பவுன் தங்கம்............................... 42,920

1 கிராம் வெள்ளி............................. 83.40

1 கிலோ வெள்ளி............................83,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 5,385

1 பவுன் தங்கம்...............................43,080

1 கிராம் வெள்ளி.............................83.40

1 கிலோ வெள்ளி.............................83,400

ADVERTISEMENT
ADVERTISEMENT