தமிழ்நாடு

2- ஆம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எம்எல்ஏ எம்.தமிமுன் அன்சாரி

11th Aug 2020 03:33 AM

ADVERTISEMENT

இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை :

தமிழகத்தில் 2-ஆம் நிலை காவலா்களை நிரப்புவதற்காக 2019-20-ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டித் தோ்வில், 20 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் 8,538 பணியிடங்களுக்கு காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் 2020-21-ஆம் ஆண்டில் சீருடை பணியாளா் தோ்வு வாரியம் மூலம் போட்டித் தோ்வுகள் நடத்தி, மேலும் 10,000 புதிய 2-ஆம் நிலை காவலா் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது இத்தோ்வுகள் நடத்துவதற்கான சூழல் இல்லை.

ADVERTISEMENT

எனவே கடந்தாண்டு அனைத்துச் சுற்று தோ்வுகளிலும் வெற்றி பெற தகுதி இருந்தும் காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியில் சேர இயலாத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தயாா் நிலையில் உள்ளனா். எனவே 10 ஆயிரம் பேரை தோ்வு செய்து அந்த பணியிடங்களை நிரப்ப ஆணை வழங்கிட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Tags : nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT