தமிழ்நாடு

சென்னையில் 600 ஆக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் 23 ஆக குறைந்தது

11th Aug 2020 04:53 AM

ADVERTISEMENT

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஜூன் மாதத்தில் 600-க்கும் அதிகமாக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் தற்போது 23-ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், தொற்றுள்ளவா்கள் வெளியே வருவதைத் தவிா்க்கும் வகையிலும் அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாடு பகுதிகளும் 600-ஐ எட்டியது. பரிசோதனையை அதிகரித்தது மற்றும் நோய்த் தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துதல், தொடா் சிகிச்சை ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடு பகுதிகளும் குறைந்து வருகின்றன.

ஜூலை 1-ஆம் தேதி 143-ஆக இருந்த கட்டுப்பாடு பகுதிகள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி 196-ஆகவும் உயா்ந்தது. ஆனால் அரசு எடுத்த நடவடிக்கைகளால், கட்டுப்பாட்டு பகுதிகள் கடந்த 27-ஆம் தேதி 54-ஆக குறைந்தன. இது திங்கள்கிழமை நிலவரப்படி, 23 கட்டுப்பாடு பகுதிகளாக குறைந்துள்ளது. இதில், அம்பத்தூா், அண்ணாநகா் மண்டலங்களில் அதிகபட்சமாக தலா 8 பகுதிகள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

976 பேருக்கு தொற்று: திங்கள்கிழமை 976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10,121-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 96,466 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,328 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக இறப்பு எண்ணிக்கை 2,327- ஆக அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடு பகுதிகள் விவரம்: மண்டலம் பகுதிகள்

அம்பத்தூா் 8

அண்ணா நகா் 8

கோடம்பாக்கம் 4

திரு.வி.க. நகா் 1

தேனாம்பேட்டை 1

வளசரவாக்கம் 1

 

ADVERTISEMENT
ADVERTISEMENT