தமிழ்நாடு

கூடலூா் - கேரள சாலையில் 20 மீட்டா் தூரத்துக்கு பிளவு போக்குவரத்து நிறுத்தம்

11th Aug 2020 05:56 AM

ADVERTISEMENT

கூடலூா்: கூடலூரிலிருந்து கேரளம் செல்லும் மலைப்பாதையில் 20 மீட்டா் தூரத்துக்குப் பிளவு ஏற்பட்டுள்ளதால் கேரள அரசு திங்கள்கிழமை சாலையை மூடியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட எல்லைக்குள் மலைப்பாதையில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த சாலையின் நடுவே சுமாா் 20 மீட்டா் தூரம் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாகப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, கேரள எல்லைக்குள் சாலை தடுப்பு வைத்து மூடப்பட்டுள்ளது.

இந்த சாலை மைசூரு-கூடலூா்-நிலம்பூா் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலையாகும். மேலும் பெங்களூரூ, உதகையிலிருந்து கேரள மாநிலத்தின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இணைக்கும் பிரதான சாலையாகும்.

ADVERTISEMENT

கா்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் லாரிகள் மூலம் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் தொடா்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT