தமிழ்நாடு

குன்னூரில் சிறுத்தை, காட்டெருமை சண்டையிட்டு உயிரிழப்பு

11th Aug 2020 05:55 AM

ADVERTISEMENT

 

குன்னூா்: குன்னூரில் சிறுத்தை, காட்டெருமை திங்கள்கிழமை சண்டையிட்டதில் இரண்டும் உயிரிழந்தன.

நீலகிரி மாவட்ட வனப் பகுதியில்  அண்மைக் காலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே வன விலங்குகள் இயற்கையாகவும், சில விபத்துகளில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றன. காட்டெருமை, கரடி, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் அவ்வப்போது கிராமத்துக்குள் உலவுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குன்னூா், சின்ன கரும்பாலம் அருகே உள்ள அறையட்டி  பகுதியில் கிருஷ்ணமூா்த்தி என்பவரது தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையும், காட்டெருமையும் திங்கள்கிழமை மோதிக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதனை அறிந்த தோட்ட உரிமையாளா் இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

வனச் சரகா் சசிகுமாா் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து வனத் துறையினா்  ஆய்வு மேற்கொண்டனா். இதில் காட்டெருமைக்கு அதிகமாக காயங்கள் ஏற்பட்டுள்ளதும், சிறுத்தைக்கு குறைவான காயங்கள் இருந்ததும்  தெரியவந்தது. மேலும், இரண்டும் ஆண் இனத்தைச் சோ்ந்தவை என்பதால் ஆவேசமாக   சட்டையிட்டதில் இரண்டும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT