தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

9th Aug 2020 12:41 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.189.38 கோடி வசூலாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து, முந்தைய நாள் சனிக்கிழமைகளில் டாஸ்மாக்  கடைகளில் மது விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன்படி, நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.57 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

ADVERTISEMENT

அதேநேரத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.188.86 கோடி வசூலாகி இருந்தது. கடந்த 6 வாரங்களில் நேற்று ஒரேநாளில் அதிக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : tasmac
ADVERTISEMENT
ADVERTISEMENT