தமிழ்நாடு

ஹிந்தி தெரியாததால், இந்தியரா என்று கேள்வி கேட்ட அதிகாரி: கனிமொழி ட்வீட்

9th Aug 2020 04:18 PM

ADVERTISEMENT


சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, தான் இந்தியரா என்று அந்த அதிகாரி கேட்டதாக திமுக எம்பி கனிமொழி சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியரா என்று கேட்டார். எப்போதிலிருந்து ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது." என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT