தமிழ்நாடு

அம்பத்தூரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,462 ஆக உயர்வு

6th Aug 2020 11:54 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அம்பத்தூரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,462 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அம்பத்தூர் உள்ளிட்ட சில மண்டலங்களில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. அம்பத்தூரை அடுத்து அண்ணாநகரிலும், கோடம்பாக்கத்திலும் 1,300 ஆகவே தொடர்ந்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த ஜூலை மாதத்தில் கரோனா நோய்த் தொற்றால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 1,200-ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 5 நாள்களாக சராசரியாக 1,000-மாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களைப் பொருத்தவரை சென்னையில் நோய்த் தொற்று தாக்கம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து காணப்பட்டது. இதில், வடசென்னைக்கு உள்பட்ட ராயபுரம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் மற்றும் மத்திய சென்னைக்கு உள்பட்ட அண்ணா நகா், கோடம்பாக்கம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், தேனாம்பேட்டை, தென் சென்னைக்கு உள்பட்ட வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சியால் தொடக்கத்தில் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை சுமாா் 12 ஆயிரம் வரை உயா்த்தப்பட்டது. மேலும், நோயுள்ளவா்களைக் கண்டறிதல், அவா்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று மெல்ல மெல்லமாக குறைந்து வருகிறது.

ADVERTISEMENT

குறையும் கரோனா: கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி 19,826 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்தில் அதாவது ஜூலை 5-ஆம் தேதி வரை 48,428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,254-ஆக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையுடன் (ஆகஸ்ட் 5) முடிவடைந்த ஒரு மாதத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 36,750-ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு நோய்த் தொற்றால் சராசரியாக 1,200 போ் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வரையிலான 5 நாள்களில் சராசரியாக 1,000-ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், சென்னையின் 15 மண்டலங்களில் மே மாதம் முதல் தற்போது வரை நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கு பெற்றுள்ளனா். அதன் மூலம் 16,336 பேருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பில் 18 சதவீதம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றனா்.


1,044 பேருக்கு தொற்று
சென்னையில் புதன்கிழமை 1,044 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5,004-ஆக அதிகரித்துள்ளது. 90,966- போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 11,811 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் இதுவரை 2,227 போ் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனா்.

குறையும் கரோனா பாதிப்பு விவரம்

நாள்---------தொற்று எண்ணிக்கை

ஜூலை- 7---------1,203

ஜூலை-8---------1,261

ஜூலை-9---------1,216

ஜூலை-31---------1,013

ஆகஸ்ட்- 1---------1,074

ஆகஸ்ட்-2---------1,065

ஆகஸ்ட்-3---------1,021

ஆகஸ்ட்-4---------1,023

ஆகஸ்ட்-5---------1,044

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT