தமிழ்நாடு

பிடிஐ செய்தியாளர் பிரசாத் காலமானார்

6th Aug 2020 09:40 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பி.எஸ்.எல்.பிரசாத் (65) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.

மறைந்த பி.எஸ்.எல்.பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக சென்னை உயர்நீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு குமுதவள்ளி என்ற மனைவி உள்ளார்.

சென்னை வரதா முத்தியப்பன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், செய்தியாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் 3 மணிக்கு புது ஆவடி சாலையில் உள்ள வேலாங்காடு மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

Tags : passed away
ADVERTISEMENT
ADVERTISEMENT