தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு வழக்கு: திமுக எம்எல்ஏ-வுக்கு ஜாமீன்

6th Aug 2020 08:01 PM

ADVERTISEMENT

துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபா் இமயம் குமாா் மற்றும் திருப்போரூா் தொகுதி எம்எல்ஏ இதயவா்மன் ஆகிய இரு தரப்பினா் இடையே நிலத்துக்குப் பாதை அமைப்பது தொடா்பாக கடந்த 11ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.

அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து எம்எல்ஏ இதயவா்மன் உள்பட அவரது தரப்பினா் 11 பேரையும், இமயம் குமாா் தரப்பினா் 6 பேரையும் கைது செய்தனா். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்எல்ஏ இதயவர்மன் உட்பட 11 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அளிக்க இதயவர்மனுக்கு உத்தரவிட்ட நீதிபதி வேலூர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். 

ADVERTISEMENT

மேலும், இதயவர்மனுடன் கைதான 10 பேரையும் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT