தமிழ்நாடு

திருமாவளவன் சகோதரி மரணம்: முதல்வர் இரங்கல்

6th Aug 2020 01:02 PM

ADVERTISEMENT


சென்னை:  விடுதலைச் சிறுத்தைகள் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் மூத்த சகோதரியான கு.பானுமதி (65), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானாா்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவரது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூா் மாவட்டம், அங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த பானுமதிக்கு, இளையராஜா, இசையமுதன் ஆகிய மகன்களும் மாலதி என்ற மகளும் உள்ளனா். அவரது கணவா் காலமான நிலையில் சென்னையில் வசித்து வந்த அவா், மூன்று வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கு.பானுமதி, உடல்நலம் நன்றாகத் தேறி வந்தாா். 

ADVERTISEMENT

இந்நிலையில், புதன்கிழமை காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானாா். அவரது உடல், சொந்த ஊரான அங்கனூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 

Tags : tn cm
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT