தமிழ்நாடு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கரோனா

6th Aug 2020 06:06 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. 

அதேவேளையில் கரோனா நோய் தொற்று குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 40 சதவீதம் பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அதேபோல், முன்னாள் மருத்துவக் கல்லூரி முதல்வரும், தற்போது கரோனா தடுப்பு பிரிவு மருத்துவருமான கண்ணனுக்கும் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. 

இதையடுத்து இருவருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT