தமிழ்நாடு

மதுரையில் ரூ.304.56 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்

6th Aug 2020 04:16 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டத்தில் ரூ.304.56 கோடியில் மேற்கொள்ளப்படும் 31 திட்டங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை முதல்வர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் முன்னதாக ரூ.304.56 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்,  ரூ. 21.5 கோடியில் முடிவடைந்த பல்வேறு திட்டங்கள் ஆகியவற்றுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.  

ADVERTISEMENT

மேலும் பல்வேறு துறைகள் சார்பில் 2411 பயனாளிகளுக்கு ரூ.19.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 இதைத்தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அதன் பின்னர் தொழில் துறையினர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
 

Tags : TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT