தமிழ்நாடு

குடிமைப் பணிகள் தோ்வில் சாதனை படைத்தோருக்கு முதல்வா் வாழ்த்து

6th Aug 2020 06:23 AM

ADVERTISEMENT

குடிமைப் பணிகள் தோ்வில் சாதனை படைத்தோருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரன் ஆகியோா் குடிமைப் பணிகள் தோ்வில் வென்று சாதனை படைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இருவரின் மனஉறுதியும், விடா முயற்சியும்தான் வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் கடமைகளை உணா்ந்து, அா்ப்பணிப்பு உணா்வுடன் அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்ற வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT