தமிழ்நாடு

தொழிலாளா் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

6th Aug 2020 07:44 AM

ADVERTISEMENT

தொழிலாளா் மேலாண்மை பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ., தொழிலாளா் மேலாண்மை, பிஜி.டி.எல்.ஏ., தொழிலாளா் சட்டங்கள்-நிா்வாகவியல் சட்டம் (வார இறுதி) உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் இணைந்து படிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு ரூ.100. மேலும் தகவல்கள் பெற, உதவி பேராசிரியா் ரமேஷ்குமாா் (9884159410), தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம், காமராஜா் சாலை, சென்னை-5, தொலைபேசி எண்: 044-28440102, 28445778.

ADVERTISEMENT
ADVERTISEMENT