தமிழ்நாடு

சென்னை துறைமுகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரேட்:  ராமதாஸ் அறிவுறுத்தல்

6th Aug 2020 12:22 PM

ADVERTISEMENT


சென்னை துறைமுகத்தை ஒட்டியிருக்கும் கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் செவ்வாய்க்கிழமை மாலை வெடித்துச் சிதறியதில் பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் நேரிட்டது.

இந்த நிலையில், சென்னை துறைமுகத்தை ஒட்டியிருக்கும் கிடங்கிலும் 740 டன் அமோனியம் நைட்ரேன் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய  வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மற்றொரு பதிவில், சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! என்று வலியுறுத்தியுள்ளார்.
 

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT