தமிழ்நாடு

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்!

29th Apr 2020 01:26 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும்  பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்களில் 23 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும்  குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர். இதன்மூலம் கரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.

இம்மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT