தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

29th Apr 2020 03:45 PM

ADVERTISEMENT


சென்னை: மே 3-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு நிறைவடையவிருக்கும் நிலையில், தமிழகத்தில் மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் சனிக்கிழமை, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கை நீட்டிப்பது அல்லது பகுதியாக நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்கும் நிலையில், வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT