தமிழ்நாடு

சென்னை திரு.வி.க. நகரில் ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று 

29th Apr 2020 11:03 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திரு.வி.க. நகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மட்டும் 121 பேருக்கு அந்த நோய்த்தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில், அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 103 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ராயபுரத்தில் 164 பேருக்கும், திருவிக நகரில் 128 பேருக்கும் கரோனா தொற்று பாதித்துள்ளது.

அதிலும், சென்னை, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் அதன் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தலைநகா் சென்னையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன் காரணமாக சென்னை மாநகரில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முழு வீச்சில் முன்னெடுத்து வருகிறது. 

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 121 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 103 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும், நாமக்கல்லில் இருவருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 15
மணலி 1
மாதவரம் 4
தண்டையாா்பேட்டை 70
ராயபுரம் 164
திரு.வி.க. நகா் 128
அம்பத்தூா் 19
அண்ணா நகா் 65
தேனாம்பேட்டை 81
கோடம்பாக்கம் 60
வளசரவாக்கம் 26
ஆலந்தூா் 9
அடையாறு 19
பெருங்குடி 9
சோழிங்கநல்லூா் 2
பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1
மொத்தம் 673
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT