தமிழ்நாடு

ஹைதராபாத்திலிருந்து திருக்கோயிலூர்.. 500 கி.மீ. நடந்தே வந்த இளைஞர்

29th Apr 2020 05:23 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்  அருகே கொள்ளுர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சதிஷ் குமார்.  இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆன்லைன் மார்க்கெட்டிங் பணிக்காக சென்றார். 

தற்போது கரோனா தொற்றால் நாடு முழுவதும்144 தடை உத்தரவால் சதிஷ்குமார் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி ஐதராபாத் நகரிலிருந்து நடந்தே சொந்த ஊர் திரும்ப முடிவு செய்த சதிஷ் குமார் நேற்று இரவு திருவண்ணாமலை வரை நடந்தே வந்து சேர்ந்தார். 

இன்று அதிகாலை நடக்க தொடங்கி வெறையூர் அருகே வந்தும், தகவலறிந்த அவரது மாமா மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் சதிஷ் குமாரை அழைத்து வர சென்ற போது இருவரையும்  வெறையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  செய்வது அறியாமல் தவித்த சதிஷ்குமார் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடியிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ADVERTISEMENT

பொன்முடி அவர்கள் உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் சதிஷ் குமார் மற்றும் அவரது மாமா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற காவல்துறையினர் உடனே இருவரையும் விடுவித்தனர். அவர்கள் திருக்கோவிலூர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு பின்பு கொள்ளூர் கிராமத்திற்குச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT