தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி

29th Apr 2020 07:02 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று (புதன்கிழமை) மாலை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர இன்றைக்கு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

அதேசமயம் இன்றைக்கு மட்டும் மொத்தம் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT