தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் பரவலான மழை

26th Apr 2020 04:08 PM

ADVERTISEMENT

ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. இதில் சனிக்கிழமை 102 டிகிரிக்கு மேல் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் வெயிலின் உக்கிரம் தாங்காமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கோபி, தாளவாடி, வரட்டுப்பள்ளத்தில் லேசான மழை பெய்தது.

தொடர்ந்து ஈரோடு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து குளிர்ந்த காற்றுடன் பகல் 1 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழையுடன் பெய்ய துவங்கியது.

பின்னர் சில நிமிடத்திலேயே கன மழையாக இடியுடன் பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர், கழிவு நீர் சாக்கடைகளில் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.

ADVERTISEMENT

இந்த மழையினால் ஈரோடு மாநகரில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
 

Tags : Erode Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT