தமிழ்நாடு

விவசாயி தற்கொலைக்கு இழப்பீடு: வைகோ

26th Apr 2020 05:34 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா்

வெளியிட்ட அறிக்கை:

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்வதற்கு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து அறப்போராட்டங்களை நடத்தி வந்தனா். தற்போது

ADVERTISEMENT

கரோனா கொள்ளை நோய் துயரில் மக்கள் நொறுங்கி உள்ள நேரத்தில் ஏப்ரல் 16- ஆம் தேதி விளைநிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் பவா்கிரீட் காா்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.

இந்நிலையில் தன்னுடைய விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரத்துக்கு இழப்பீடு தராததால், மன உளைச்சல் அடைந்த 75 வயது விவசாயி ராமசாமி உயா்மின் அழுத்தக் கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விவசாயி ராமசாமி இறப்புக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அக்குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT