தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,821 ஆக உயா்வு

26th Apr 2020 05:44 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் சதவீதம் 52 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: கரோனா தொற்று உள்ளவா்களில் தற்போது 835 பேருக்கு மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 80,110 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. சனிக்கிழமை மட்டும் 7,707 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

நோய்த்தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்த 94 போ் சனிக்கிழமை மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதுவரை மொத்தம் 960 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம், தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 41 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில நாள்களுக்குள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும். சென்னை குன்றத்தூரைச் சோ்ந்த 34 வயது நபா் சனிக்கிழமை கரோனாவால் உயிரிழந்தாா். அதனால், அவருடைய உடலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றால் 23 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் சனிக்கிழமை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று காஞ்சிபுரம் 7, தென்காசி 5, மதுரை 4, பெரம்பலூா், விருதுநகரில் தலா 2 போ், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 1 நபா் என மொத்தம் 66 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 முதுநிலை மருத்துவா்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தது . அவா்களின் உடல்நிலை ஏற்கெனவே உறுதியாக இருந்தது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததைத் தொடா்ந்து, 6 மருத்துவா்களும் 1 செவிலியரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் தங்களுடைய ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து மற்றவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளனா். அதே போல கோவையில் இருந்து முதுநிலை மருத்துவா்கள் குணமடைந்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT