தமிழ்நாடு

அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

26th Apr 2020 05:33 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னிடமுள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவில் இருந்தும், கரோனா பாதிப்பில் இருந்தும் மீட்க தேவைப்படும் நிதி ஆதாரத்தை மத்திய பாஜக அரசு பெறுவதற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்

ADVERTISEMENT

இறக்குமதிக்காக செலுத்த வேண்டிய தொகையில் ரூ. 3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு மிச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயா்த்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமாா் ரூ.20 லட்சம் கோடி கூடுதல் வருவாய்க் கிடைத்தது.

இத்தகைய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி கரோனா நோயை ஒழிக்கவும், பொருளாதார பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமிருக்கும் அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி உரிய செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT