தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி

26th Apr 2020 06:05 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி: 

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர இன்று ஒருநாள் மட்டும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோரில் ஆண்கள் 39, பெண்கள் 25. 

அதேசமயம், சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டி 523 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் முதன்முதலாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றிய தகவல் இன்றைய பட்டியலில் இடம்பெறவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT