தமிழ்நாடு

ராயபுரத்தில் அதிகபட்சமாக 137 பேருக்கு கரோனா: சென்னையில் மண்டலவாரியாக நிலவரம்

26th Apr 2020 11:06 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக  66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு பாதிப்பு 1,821 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் நேற்று 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு 495ஆக அதிகரித்தது.

தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

சென்னையில் ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 137 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திரு.வி.க. நகரில் 80 பேருக்கும், தண்டையார் பேட்டையில் 64 பேருக்கும், தேனாம்பேட்டையில் 54 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு விவரம்:

ADVERTISEMENT
ADVERTISEMENT