தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது!

23rd Apr 2020 06:17 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,629 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 90. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 752. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதுவரை 65,977 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 6,954 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 59,952 நபர்களுக்கும் இன்று மட்டும் 6,880 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைக்கு பரிசோதனை மேற்கொண்ட 6,880 பேரில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,683 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,303. மேலும், 106 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159. தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் பாதிப்பு: 1,683

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 20

குணமடைந்தோர் எண்ணிக்கை: 752

ADVERTISEMENT
ADVERTISEMENT