தமிழ்நாடு

அரசு மீது குற்றம்சுமத்துவதற்கு இது சரியான நேரமல்ல: பாஜக தலைவர் இல.கணேசன் 

20th Apr 2020 12:09 PM

ADVERTISEMENT

அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று  இல கணேசன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல .கணேசன் ஜூம் செயலி மூலம் மதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது .உலகிலுள்ள வளர்ந்த, முன்னேறிய நாடுகள் அனைத்துடனும் இந்தியாவை ஒப்பிடும்போது அந்த நாடுகளை விட நம் நாட்டின் மக்கள் தொகை மிக அதிகம் .ஆனால் அந்த நாடுகளை விட கரோனா  பாதிப்பு நமது நாட்டில் மிகவும் குறைவு. இதற்கு அரசின் திட்டமிடல் முக்கிய காரணம் என்றாலும் மக்கள் அரசின் வேண்டுகோளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளித்ததும் மிக முக்கியமான ஒன்று. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒத்துழைப்பு கொடுத்தது .இதேபோல மக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து இருந்து வந்தால் கரோனாவை நாம் வெல்ல முடியும். ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கு நிபந்தனைகளுடன் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அதே போல தமிழக அரசும் இது தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் கவனத்திற்கு 16 ஆயிரத்து 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்தி 302 பேர் குணமடைந்துள்ளனர். 519 பேர் இறந்துள்ளனர். இதில் தமிழகம் 1477 கரோனா பாதிப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இந்து ஆன்மீக அமைப்புகள் சேவைப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாஜக சார்பில் 27 லட்சத்து 34 ஆயிரத்து 685 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மூடிக்கிட்டு மோடி  என்றழைக்கப்படும் அரிசி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 5 லட்சத்து 63 ஆயிரத்தி 293 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது .4 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. 7 லட்சம் 20000 மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்தமாக 48 லட்சத்தி 10 ஆயிரத்து 775 பேர் பயனடைந்துள்ளனர். இந்த சேவைப் பணியில் பாஜகவை சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரத்து 816 பேர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல பல்வேறு சேவை பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாட்டுக்கு இது சோதனையான காலகட்டம் .எனவே எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சுமத்தவும் அரசியல் பேசுவதற்கும் இது நேரமில்லை. அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டிய நேரம் இது .எதிர்கட்சிகள் விமர்சனத்தில் ஈடுபடலாம் .ஆனால் வார்த்தைகளில்  கவனம் தேவை. தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட கூடாது. கரோனா போன்ற இக்கட்டான நேரங்களில் மத்திய அரசிடம் மட்டுமே திட்டமிடலும் அதிகாரமும் இருக்க வேண்டும். அப்போதுதான் மாநிலங்களுக்கான தேவையை மத்திய அரசால் பூர்த்தி செய்ய முடியும் .எனவே சிறிது காலத்திற்கு மத்திய அரசிடம் அதிகாரம் இருப்பது நல்லது என்றே கருதுகிறேன்.

ADVERTISEMENT

1975இல் தனிநபர்  ஒருவரால் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. தற்போது நாட்டின் நலன் கருதி மத்திய அரசிடம் கூடுதல் அதிகாரம் இருப்பது  நல்லதே. கரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நான் உடன்படுகிறேன் .இதில் தமிழக முதல்வரின் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மே 3 வரையாவது சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT