தமிழ்நாடு

ஈகுவார்பாளையத்தில் வடமாநிலத்தவர் 300 பேர் உள்ளிட்ட 1650 குடும்பத்துக்கு நிவாரண உதவி

20th Apr 2020 02:31 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி சார்பில் 300வட மாநிலத்தவர் உள்ளிட்ட 1650 குடும்பத்தினருக்கு 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள் என 21 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

ஈகுவார்பாளையத்தில் ஊராட்சி தலைவர் என்.உஷா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என்.ஸ்ரீதர், ஊராட்சி துணை தலைவர் சௌந்தரி மகேஷ், வார்டு உறுப்பினர்கள் அம்மு எபினேசர், முத்துக்குமார், அலமேலு ரமேஷ், மூர்த்தி, சிவா, சுபாஷினி யுவராஜ், கார்த்திக், யசோதா டில்லிபாபு, ஊராட்சி செயலாளர் பிரபு,சமூக ஆர்வலர் மாதவன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று 1650 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி உள்ளிட்ட 21பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து ஈகுவார்பாளையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT