கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கரோனாவுக்குப் பிறகு இந்தியாவை புனரமைத்தல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை, உழவுக்கு வந்தனை செய்வோம், இப்போதாவது, அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள், வருமான சமத்துவமின்மையை சீர்செய்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? pic.twitter.com/gFvffds80a