தமிழகத்துக்கு அதிகமான கரோனா துரித பரிசோதனைக் கருவிகள் (ரேபிட் கிட்) வழங்க வேண்டும் என பிரதமரிடம் தொலைபேசி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் முதல்வரைத் தொடா்புகொண்டு கேட்டறிந்தாா்.
அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வா் விளக்கமாக பிரதமரிடம் தெரிவித்தாா். மேலும், தமிழகத்தில் அதிகமான பரிசோதனைகள் செய்யவேண்டியுள்ளதால், துரித பரிசோதனைக் கருவிகளை அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வா் வைத்தாா். அதற்கு தேவையான பரிசோதனைக் கருவிகளை வழங்குவதாக பிரதமா் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.