தமிழ்நாடு

ஊரடங்கு: தமிழகத்தில் 2,35,164 வழக்குகள் பதிவு

20th Apr 2020 11:10 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,35,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவா்களை பிடித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனா்.

அந்த வையில் தமிழகத்தில் இதுவரை 2,35,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,11,467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடமிருந்து ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT