தமிழ்நாடு

ராயபுரத்தில் 91 பேருக்கு கரோனா:  மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை

20th Apr 2020 11:33 AM

ADVERTISEMENT

சென்னையில் அதிகபட்சமாக வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 91 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,477-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 285-ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 91 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. 

ADVERTISEMENT

மண்டல வாரியாக..
திருவொற்றியூர் - 5
மணலி - 0
மாதவரம்- 3 
தண்ட்டையார்பேட்டை - 30
ராயபுரம் - 91
திருவிக நகர் - 38
அம்பத்தூர் -  0
அண்ணா நகர் - 26
தேனாம்பேட்டை - 36
கோடம்பாக்கம் - 29
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 3
அடையார் - 7
பெருங்குடி - 7
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT