தமிழ்நாடு

கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது

20th Apr 2020 11:50 AM

ADVERTISEMENT

கரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த மருத்துவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். 

இதையடுத்து அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவரது உடல் அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கரோனாவால் இறந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவர்களை செய்து கைது செய்தனர். 

ADVERTISEMENT

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT