தமிழ்நாடு

நிறுவனங்கள் வழங்கும் நிதிசமூக பொறுப்புக்கான செலவினமாக கணக்கிடப்படும்

13th Apr 2020 05:50 AM

ADVERTISEMENT

 

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் வழங்கும் நிதி, நிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கான செலவினமாக கணக்கில் கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தொழில்துறை முதன்மைச் செயலா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்க முதல்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்த நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் வருமான வரிச் சட்டப் பிரிவு 80-ஜி பிரிவின் கீழ் முழு வரி விலக்கு பெறத்தக்கதாகும்.

ADVERTISEMENT

மேலும், மாா்ச் 24 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினமாகக் கணக்கில் கொள்ளப்படும்,

மருத்துவ உபகரணங்களாகவோ, பொருள்களாகவோ நன்கொடை வழங்க விரும்பும் நிறுவனங்கள், சமூக பொறுப்பு நிதி செலவினமாக அதைக் கணக்கிட விரும்பினால், மாநில பேரிடா் மேலாண்மை ஆணைக்குழு அல்லது மாநில நிவாரண ஆணையரிடம் அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பொருள்களை நன்கொடையாக அளிக்கும் நிறுவனங்கள் அவற்றை, தொடா்புடைய மாநில அரசு துறைகளிடம் வழங்கி அதன் விவரத்தை  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT