தமிழ்நாடு

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்

13th Apr 2020 05:11 AM

ADVERTISEMENT

 

திமுக தலைமையில் சென்னையில் புதன்கிழமை (ஏப். 15) அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த்தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து விவாதிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT