தமிழ்நாடு

கூவாகம் திருவிழா ஒத்திவைப்பு

7th Apr 2020 09:34 AM

ADVERTISEMENT

விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சரகம் கூவாகம் கிராமத்தில், உலக திருநங்கையர்கள் பங்கேற்கும் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் 21-04-20 ஆம் தேதி கொடியேற்றி தேர் திருவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் பரவி வருவதை தடுக்க வேண்டி 144 தடை உத்தரவு போட்டிருப்பதால், அதை மதிக்க வேண்டி நடக்க இருந்த திருவிழா குறித்து கூவாகம் - நத்தம் - தொட்டி - -சிவலிங்ககுலம் - அண்ணா நகர் - பாரதி நகர் - கீழ்குப்பம் வேலூர் - கொரட்டூர் -  கூவாகம்  ஆதிதிராவிட -ஊர் மக்கள்  மற்றும் திருவிழா நடத்தும் நாட்டாமைகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். 

இதில்,அரசால் அறிவிக்கப்பட்டுள்ள  தடை உத்தரவை மதிக்க வேண்டியும்,  நோய் பரவாமல் இருக்கவும் 21-ஆம் தேதி முதல் நடக்க இருந்த கூவாகம் தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு சித்திரை மாதம் வழக்கம்போல் தேர் திருவிழா நடக்கும் என மேற்கண்ட ஊர் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT