தமிழ்நாடு

சீர்காழியில் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைத்த பகுதிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்

7th Apr 2020 03:20 PM

ADVERTISEMENT

 

சீர்காழி நகரப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைத்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டார்.

தில்லி சென்று திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் சீர்காழி சபாநாயகர் தெருவில் அவரது மாமியார் வீட்டில் 15 நாட்கள் தங்கிச் சென்றுள்ளார். அதனால் தாடாளன் மேலவீதி கீழவீதி சபாநாயகர் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளை நகராட்சி மற்றும் காவல்துறையினர் தனிமைப்படுத்தி சீல் வைத்தனர்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் எவ்வாறு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில்..

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 32 பேரைத் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ததில் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சீர்காழி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிச் சென்றுள்ளார். அதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் யார் யார் என்று விசாரணை செய்து வருவதாகவும்
 
அவர் உறவினர் வீட்டைச் சுற்றி அனைத்து பகுதியையும் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் இந்த பகுதியில் 28 நாட்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனத் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 2545 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு 28 மருத்துவக் குழுக்கள் நேரடியாகச் சென்று நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து வருகின்றனர்.

சீர்காழி பகுதி மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT