தமிழ்நாடு

தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது: தமிழக அரசு

7th Apr 2020 09:41 PM

ADVERTISEMENT


கரோனா கால ஊரடங்கிலிருந்து சில தொழில்களுக்கு விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை செயல்படலாம் எனத் தமிழக தொழிற்சாலைகள் துறை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை ரத்து செய்து தற்போது திரும்பப் பெற்றுவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT