தமிழ்நாடு

கரோனா பாதிப்பைத் தடுக்க சாலை வாழ் மக்களைப் பிடித்துச் சென்ற அலுவலர்கள்

7th Apr 2020 04:40 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் கரோனா பாதிப்பைத் தடுப்பதற்காகச் சாலை வாழ் மக்களை மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர், காவல் துறையினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் என ஏறத்தாழ 100 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், இவர்கள் சாலையோரம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எந்தவித பாதுகாப்போ, சமூக இடைவெளியோ இல்லாமல் வாழ்ந்து வருவதுடன், உணவின்றியும் தவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பான ரெனிவல் பவுன்டேஷன் அமைப்பினர், காவல் துறையினர் ஆகியோர் இணைந்து தஞ்சாவூர் ரயிலடி, காந்திஜி சாலை, நீதிமன்றச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசித்த சுமார் 30 பேரை செவ்வாய்க்கிழமை பிடித்து, வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதுகுறித்து ரெனிவல் பவுன்டேஷன் நிர்வாக அறங்காவலர் கே. வீரமணி தெரிவித்தது:

தஞ்சாவூரில் இதுபோல 100 பேர் சாலையோரம் வாழ்கின்றனர். இவர்களை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பதற்காகப் பிடித்து வருகிறோம். இவர்களை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் வீரமணி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT