தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்? மு.க.ஸ்டாலின் கண்டனம்

7th Apr 2020 02:18 PM

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி எம்எல்ஏ ஒதுக்கிய நிதியை மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தொகுதி மக்கள் அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிதி ஒதுக்கீட்டை முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : DMK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT