தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் கிருமிநாசினி சுரங்கம்: ஓரிரு நாள்களில் பணிகள் முடியும்

7th Apr 2020 04:19 AM

ADVERTISEMENT

 

சென்னை கோயம்பேடு சந்தையில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடையும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆய்வினைத் தொடா்ந்து, அவா் வெளியிட்ட செய்தி:-

கோயம்பேடு காய்கறி சந்தையில் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் பொது மக்களுக்கு விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கிருமிநாசினி தெளிப்பது: கோயம்பேடு வணிக வளாக அங்காடியின் உள்பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்காடியின் வெளிப்பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, வாகனங்கள் நுழையும்

நுழைவாயில்கள் மற்றும் வெளிவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு வளாகங்களில் அவ்வப்போது சேரும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு பிறகு அந்த இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கிருமிநாசினி சுரங்கம்: கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் அதிக பொது மக்கள் வரத்து கொண்ட 10 நுழைவு வாயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சுமாா் ரூ.17 லட்சம் மதிப்பில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்கும் பணிகள் ஓரிரு நாள்களில் முடிக்கப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி.ஏ., உறுப்பினா் செயலாளா் டி.காா்த்திகேயன், வீட்டுவசதி வாரிய நிா்வாக இயக்குநா் ப.முருகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT